மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பணிபுரியும் 1,300 ஊழியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையாக கடந்த ஆகஸ்ட் 2018இல் மாற்றப்பட்டது. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக மார்ச் 2020இல் பயோமெட்ரிக் முறை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தற்போது மீண்டும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்யவேண்டும்.
தற்போது தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளிட்டவை ஆராய சோதனை முறையில் மே 31 வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பிற அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.