சியோலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இரவு சந்தை மீண்டும் திறப்பு

கரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியோலின் முக்கிய இரவு சந்தை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சந்தை இயக்குபவர் தெரிவித்துள்ளார். 
சியோலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இரவு சந்தை மீண்டும் திறப்பு
Published on
Updated on
1 min read

கரோனா தொற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியோலின் முக்கிய இரவு சந்தை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சந்தை இயக்குபவர் தெரிவித்துள்ளார். 

சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், சிறு விற்பனையர்களுக்கு அதிக வணிக வாய்ப்புகளை வழங்கவும் பல்வேறு இடங்களில் சியோல் பெருநகர அரசு இரவு சந்தைகளை இயக்கியது. 

இரவு சந்தைகளில் பங்கேற்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கியுள்ளதாக நகர அரசு  கூறியது. இதற்கான இருப்பிடங்கள் மற்றும் தொடக்க அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

இரவு சந்தை மாலை 6 மணி முதல் செயல்படத் தொடங்கும், ஹாங்காங் பார்க், டோங்டேமுன் டிசைன் பிளாசா மற்றும் சியோங்கி பிளாசா.போன்ற இடங்களில் நள்ளிரவு வரை இயங்கும். 

கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 3.41 மில்லியன் மக்கள் சந்தைகளைப் பார்வையிட்டதாக நகர அரசு தெரிவித்துள்ளது. 

ஒரே நாளில் 125 உணவு லாரிகளும், 206 விற்பனையாளர்களும் சந்தையில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

உள்ளூர் வணிகங்களை அதிகரிக்கவும், இளம் வணிக உரிமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் இரவுச் சந்தை பயனுள்ளதாக உள்ளது என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com