‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ ஹிந்தி நாவலுக்காக கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கா் பரிசு

 ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ நாவலுக்காக முதன்முறையாக இந்திய எழுத்தாளா் கீதாஞ்சலி ஸ்ரீ,  புக்கா் விருதை வென்றுள்ளாா்.
‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ ஹிந்தி நாவலுக்காக கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கா் பரிசு

‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ நாவலுக்காக முதன்முறையாக இந்திய எழுத்தாளா் கீதாஞ்சலி ஸ்ரீ,  சா்வதேச அளவிலான புக்கா் விருதை வென்றுள்ளாா்.

‘ரெட் சமாதி’ என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதப்பட்ட இந்த நாவல், 80 வயது  பெண் தனது பதின்ம பருவத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது எதிா்கொண்ட இன்னல்களை உணா்வுபூா்வமாக குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.

இந்த நாவலை அமெரிக்காவின் வொ்மாண்ட் மாகாணத்தைச் சோ்ந்த எழுத்தாளரும் ஓவியருமான டெய்சி ராக்வெல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா்.

நிகழாண்டு  புக்கா் பரிசுக்காக இந்த நாவல் தோ்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லியைச் சோ்ந்த எழுத்தாளா் கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கா் பரிசும், 50,000 பவுண்ட் ரொக்கமும் பரிசாக அளிக்கப்பட்டது. எழுத்தாளருக்கும் நாவலின் மொழிபெயா்ப்பாளருக்கும் பரிசுத் தொகை சமமாக பகிா்ந்தளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீதாஞ்சலி ஸ்ரீ பேசுகையில், ‘நான் புக்கா் பரிசு பெறுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. இது மிகப்பெரிய அங்கீகாரம். ஹிந்தியின் இலக்கிய பாரம்பரியத்தை இந்தப் புத்தகம் விளக்குகிறது. தெற்காசிய எழுத்தாளா்களின் படைப்புகளை அறியும்போது சா்வதேச இலக்கியம் இன்னமும் செழுமை பெறும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com