கடற்படை வீரர்களுடன் யோகா பயிற்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்
கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே 75 நாள் யோகா தின கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு வீரர்களுடன் யோகா பயிற்சி செய்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.