
உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுயஉதவிக் குழுக்களின் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும், சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் பணியாற்றி வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உஷா தையல் பள்ளி மூலம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தைத்த துணிகளை சந்தைப்படுத்தவும் செய்கின்றனர். துறை மூலம் பெண்களுக்கு பல்வேறு கட்டங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 300 பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.