ஒடிசாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பாம்பு கடித்ததில் பெண் சிங்கம் உயிரிழந்தது.
ஒடிசா மாநிலம், நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவில் 15 வயது மதிக்கத்தக்க பெண் சிங்கம் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சிங்கத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிங்கம் இன்று உயிரிழந்தது. சிங்கம் வசித்த தண்ணீர் அருந்தும் தொட்டி அருகே விஷப் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதாகவும் எனவே பாம்பு கடித்து சிங்கம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனினும், சிங்கத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் சிங்கம் 2015ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் இருந்து நந்தன் கண்ணன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாமின் பாதுகாப்பு வளர்ச்சியை உறுதி செய்வோம்: முதல்வர் ஹிமந்த!

”பேரம்? அவசியமே இல்லை!” நிர்மல் குமார் பேட்டி | TVK

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை நிகழ்வுகள் - முழுவிவரம்

தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

