
கோழிக்கோடு பேருந்து நிலையத்துக்கு வந்த கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சொகுசுப் பேருந்து ஒன்று யாருமே எதிர்பாராத வகையில், பேருந்து நிலையத்தின் இரண்டு தூண்களுக்கு இடையே வசமாக சிக்கிக் கொண்டது.
கோழிக்கோடு பேருந்து நிலையத்துக்கு பெங்களூருவிலிருந்து வந்த அரசுப் பேருந்து, பேருந்துநிலையத்துக்குள் சிக்கிக் கொண்டது.
இதையும் படிக்க.. மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ்: விவாகரத்து கோரும் கணவர்
எலிப்பொறிக்குள் சிக்கிய எலி கூட அப்படி இப்படி அசைய முடியும். ஆனால், இந்த சொகுசுப் பேருந்து கொஞ்சம் கூட நகர முடியாமல் இரண்டு தூண்களுக்கு இடையே கணக்கச்சிதமாக சிக்கிக் கொண்டது.
மீண்டும் அந்த பேருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட வேண்டும். ஆனால் அதனை மீட்கும் முயற்சி பலனளிக்கவில்லை. மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து பெங்களூரு அனுப்பியது போக்குவரத்துக் கழகம்.
வழக்கமாக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அவ்வப்போது மோசமான ஏதேனும் ஒரு சம்பவங்களால் செய்திகளில் அடிபடுவது வழக்கம்தான். ஆனால், இப்படி பேருந்தே சிக்கிக் கொண்டு செய்தியாகியிருப்பது பெரும் சோகம்.
இதேவேளையில், கோழிக்கோடு பேருந்துநிலையம் தொழில்நுட்ப ரீதியில் சரியாக கட்டமைக்கப்படவில்லை என்றும், சொகுசுப் பேருந்து என்றில்லை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண பேருந்து கூட அதில் சிக்கிக் கொள்ளும் என்றும், பயணிகளுக்கும் சரியாக வசதிகள் அமைக்கப்படவில்லை என்றும், பேருந்துகளை நிறுத்திவைக்க இட வசதி இல்லை என்றும் பல புகார்கள் அடுக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.