

பெங்களூருவில் 13 பெண்கள் உள்பட 32 வெளி நாட்டினரை மாநகர போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் கண்டறிய போலீசார்ர் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரின் அடையாளம் மற்றும் முகவரிகளைச் சரிபார்க்க முடியவில்லை.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதுவரை 52.5 கோடி மதிப்பிலான 34.89 கிலோ கிராம் ஹெராயினை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைப்பற்றியதுடன், புதுதில்லியில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தலின் ராஜாவாகக் கூறப்படும் நைஜீரியர் ஒருவரைக் கைது செய்தது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல ஆப்பிரிக்கர்களை இதுவரை நகர காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.