குஜராத்தில் 'கோ பேக் மோடி'யும், 'வெல்கம் மோடி'யும்!

குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது சொந்த மண்ணிலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோ பேக் மோடி (GoBackModi ) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்கானது.
குஜராத்தில் 'கோ பேக் மோடி'யும், 'வெல்கம் மோடி'யும்!
Published on
Updated on
1 min read


குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது சொந்த மண்ணிலேயே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'கோ பேக் மோடி' (GoBackModi ) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்கானது.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் 'வெல்கம் மோடி' என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலானது. 

குஜராத் தொங்கு பால விபத்தைத் தொடர்ந்து, குஜராத் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு சிலரும், ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிலரும் ஹேஷ்டேக்குகளைக் குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

குஜராத் மாநிலம் மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அதிக எடை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது. 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட மோர்பி பகுதியைப் பார்வையிடவும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றார். 

இந்நிலையில், மோடியின் குஜராத் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டிங்காக்கினர். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில், மற்றொரு தரப்பினர் 'வெல்கம் மோடி', 'குஜராத் வித் மோடிஜி' (GujaratWithModiJi) என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாக்கினர். 

பிற்பகல் 2.30 மணியளவில் 15,300 பதிவுகளுடன் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ஆறாவது இடத்தில் இருந்தது. சிறிது நேரத்தில் மோடிக்கு ஆதரவாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான பதிவுகள் வைலரானது.

மோர்பி பாலம்: 

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் முக்கிய சுற்றுலா தலமாக இந்தப் பாலம் திகழ்ந்தது.

புனரமைப்பு காணமாக மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், அப்பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com