
பிரபல கர்நாடக பாடகர் அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளரான அருணா சாய்ராமுக்கு(70) பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளாரகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாதெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.