கராத்தே செய்யும்போது சிறுவன் செய்த தவறை ராகுல் காந்தி திருத்திய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். செல்லும் வழியில் எல்லாம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் இளைஞர்கள், குழந்தைகளையும் சந்தித்து உரையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கராத்தே கற்றுக்கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியரை சந்தித்தார். அப்போது சிறுவன் ஒருவன் கராத்தே செய்யும்போது செய்த தவறை ராகுல் திருத்தி சொல்லிக் கொடுத்தார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த விடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, ராகுல் காந்தி இன்றைய நடைபயணத்தின்போது, பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.