காரில் சாய்ந்தது குற்றமா? 6 வயது சிறுவனை எட்டி உதைத்த கேரள இளைஞர்!

கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் காரில் சாய்ந்ததற்காக 6 வயது புலம்பெயர்ந்த சிறுவனை அடித்து உதைத்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். 
காரில் சாய்ந்தது குற்றமா? 6 வயது சிறுவனை எட்டி உதைத்த கேரள இளைஞர்!
Published on
Updated on
1 min read

கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் காரில் சாய்ந்ததற்காக 6 வயது புலம்பெயர்ந்த சிறுவனை அடித்து உதைத்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் முகமது ஷேஜாத். நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட பலூன்கள் விற்கும் ராஜஸ்தானி தம்பதியினரின் மகன், கோயில் திருவிழா சீசன் தொடங்கிய நிலையில் சமீபத்தில் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். 

வியாழன் இரவு 6 வயது சிறுவன் தனது காரின் மீது சாய்ந்ததற்காகச் சிறுவனை சரமாரியாக அடித்து காலால் உதைத்துள்ளார் ஷேஜாத். இதையடுத்து, சிறுவன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். 

இதற்கிடையில், தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள், முகமது ஷேஜாத் தனது காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார். 

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், காரைக் கண்டுபிடித்து, ஷேஜாத்தை காவல் நிலையத்திற்கு வரும்படி உத்தரவிட்டனர். இன்று காலை காவல் நிலையத்திற்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது நடந்திருக்கக் கூடாத விஷயம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com