வாக்காளரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் தேர்தல் ஆணையம்: யார் அவர்?
இந்தியாவின் முதல் வாக்காளர் என்று அறியப்படும் ஷியாம் சரன் நேகி, சனிக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு சுமார் 100 வயது என்று கூறப்படுகிறது.


இந்தியாவின் முதல் வாக்காளர் என்று அறியப்படும் ஷியாம் சரன் நேகி, சனிக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு சுமார் 100 வயது என்று கூறப்படுகிறது.
முன்னதாக, மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, அஞ்சல் வாக்கு முறையில் நவம்பர் 3ஆம் தேதி தனது வாக்கினை அவர் செலுத்திவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த நேகியின் மரணத்துக்கு தேர்தல் ஆணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்தவர். ஸ்ரீ ஷியாம் சரன் நேகியின் மரணத்துக்கு, தேர்தல் ஆணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைக்கு நாங்கள் அவரை நினைத்துப் பெருமைகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் பல லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு ஊக்கம் அளித்தார். அவர் மரணிப்பதற்கு முன்பு கூட, இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தனது வாக்கினை அஞ்சல் வாக்கு மூலம் செலுத்திவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேகியின் மறைவுக்கு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், ஒரு சில நாள்களுக்கு முன்புதான், நேகி தனது வாக்கினை வீட்டிலிருந்தே அஞ்சல் வாக்கு மூலம் செலுத்துவதற்கு உதவி ஆணையர் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...