14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 7,183.42 கோடி விடுவிப்பு!

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 8-ஆவது மாதத் தவணையாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள்துறை திங்கள்கிழமை விடுவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 8-ஆவது மாதத் தவணையாக ரூ. 7,183.42 கோடியை 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள்துறை திங்கள்கிழமை விடுவித்துள்ளது.

15-ஆவது நிதிக் குழுவால் (2020-21 - 2025-26 ) மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இந்த வருவாய்ப் பற்றாக்குறை மானியம் தீா்மானிக்கப்பட்டது. 

இதன்படி, நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக, 2022-23 நிதியாண்டில், ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், ராஜஸ்தான், உத்தரக்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடியை விடுவிக்க நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

பரிந்துரை செய்யப்பட்ட மானியத் தொகை, மாநிலங்களுக்கு 12 மாதத் தவணைகளில் சமமான அளவில் விடுவிக்கப்படுகிறது.

நிகழ் நிதியாண்டிற்கான நவம்பர் மாதத்தில்  8-ஆவது மாதத் தவணையாக ரூ. 7,183.42 கோடி திங்கள்கிழமை விடுத்துள்ளது. இதில் இதுவரை இந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.57,467.33 கோடி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆந்திம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இந்த மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com