கரோனாவுக்கு பின் பெண்களிடையே மது குடிக்கும் பழக்கம் 37% அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கரோனாவுக்கு பின் பெண்களிடையே மது குடிக்கும் பழக்கம் 37% அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Published on
Updated on
2 min read


கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனமான என்ஜிஓ, தொற்றுநோய்க்குப் பிறகு, தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் பெண்களிடையே மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இதற்காக ஐந்தாயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. 

ஆய்வின் முடிவில், தொற்றுநோய்க்குப் பின்னர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் 37.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை அதிகரித்தற்கு அடுத்தடுத்த பொது முடக்கம், அதிகரிக்கப்பட்ட மது விற்பனை மற்றும் வாழ்வியல், செலவின முறைகளை மாற்றம் போன்ற காரணமாக  கூறியுள்ளனர்.

மேலும், சிறந்த சில்லறை மது விற்பனை கடைகள் வழங்கும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலைகளே தில்லியில் அதிக மது விற்பனைக்கு வழிவகுத்ததாகவும், இதுவே பெண்களிடையே மதுபானம் வாங்குவதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியது என்று 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மன அழுத்தம் மற்றும் குடிப்பழக்கம்: "தொற்றுநோயின் போது பெண்கள் வழக்கத்தை விட அதிக அளவில் குடிப்பதாகவும், இது ஆண்களை விட அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.  

மேலும், தொற்றுநோய்க்கு முன் அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் தொற்றுநோய் காலகட்டத்தில் தங்கள் குடி பழக்கத்தை அதிகரிக்க முனைந்தனர். மேலும், 'குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒருவரின் கவலைகளை மறக்க செய்து விடுகிறது' என்பது பெண்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இது ஆண்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு சமமானதாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன."

தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட மன அழுத்தமே பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்தற்குக் காரணம் என்றும்,   மன அழுத்தம் காரணமாக 45.7 சதவீதம் பேரும், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள் காரணமாக 34.4 சதவீதம் பேரும்,  சலிப்பு காரணமாக 30.1 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மன அழுத்தம், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், சலிப்பை மறப்பதற்காக மது குடிக்கும் ஆண்களுடன் ஒப்பிடுகையில், பொதுவாக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மது அருந்துகின்றனர், ஆனால் சுமார் 7 சதவீதம் பெண்கள் தீங்கு தரும் அளவில் குடிக்கு அடிமையாகி உள்ளனர். 

37.6 சதவீத பெண்கள் தங்கள் மது அருந்துவது அதிகரித்துள்ளதை ஒப்புக் கொண்டாலும், 42.3 சதவீத பெண்கள் தங்கள் அவ்வப்போது மற்றும் சந்தர்ப்பத்தின் அடிப்படையிலேயே அதிகரிப்பதாக கருதுகின்றனர்.

மன அழுத்தம், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், சலிப்பு மற்றும் பலவற்றிலிருந்து தொடங்கி,  தொற்றுநோயின் போது வேலை இழப்பு மற்றும் உடல் மற்றும் மனரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை பெண்கள் அதிகயளவில் மது குடிக்கும் பழக்கத்திற்கான காரணங்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com