
புது தில்லி: பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கௌரவ் திவேதி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
சத்தீஸ்கரின் 1995 -பிரிவு அதிகாரியான திவேதி, அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு காலத்துக்கு பதவியில் இருப்பார்.
முன்னதாக, கௌரவ் திவேதி MyGovIndia என்ற அரசு இணையத்தளத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
2017 முதல் 20222 வரை சசி சேகர் வேம்படி பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
வேம்படி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்த நிலையில், தூர்தர்ஷன் இயக்குநர் ஜெனரல் மயங்க் அகர்வாலுக்கு இந்தாண்டு ஜூன் மாதம் பிரசார் பாரதியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.