வருமான வரி கணக்கு: இதுவரை 6.85 கோடி போ் தாக்கல்

2022-23 நிதியாண்டில் இதுவரை 6.85 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வருமான வரி கணக்கு: இதுவரை 6.85 கோடி போ் தாக்கல்

2022-23 நிதியாண்டில் இதுவரை 6.85 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

2021-22 நிதியாண்டுக்கான தனிநபா் வருமான வரியைத் தாக்கல் செய்வது கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பெருநிறுவனங்கள் மற்றும் கணக்கை தணிக்கை செய்ய விரும்புவோருக்கு நவம்பா் 7-ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இறுதி நாள்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியோா், வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை அபராதத் தொகையைச் செலுத்தி கணக்கை தாக்கல் செய்ய இயலும்.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா கூறுகையில், ‘ இது வரை 6.85 போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனா். இந்த எண்ணிக்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அதிகரிக்கும்’ எனக் கூறினாா்.

நிகழாண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில், 7.14 கோடி போ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனா். இது அதற்கு முந்தைய நிதியாண்டான 2020-21-இல் தாக்கல் செய்யப்பட்டதைவிட அதிகமாகும். 2020-21-இல் 6.97 போ் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனா்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோருக்கு நிகழாண்டில் ரூ. 2 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com