தெலங்கானா முதல்வரின் பாதங்களைத் தொடும் அரசு அதிகாரி!

தெலங்கானாவில் உள்ள மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாதங்களைத் தொடும் விடியோ இணையத்தில் வைரலானது.
தெலங்கானா முதல்வரின் பாதங்களைத் தொடும் அரசு அதிகாரி!

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாதங்களைத் தொடும் விடியோ இணையத்தில் வைரலானது.

மாநிலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்யும் சில அதிகாரிகளின் போக்கை எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

எட்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் துவக்கி வைத்த நிகழ்வில், மாநில பொது சுகாதார இயக்குநர் ஜி. ஸ்ரீனிவாஸ் ராவ், முதல்வரின் பாதங்களை மரியாதை நிமித்தமாகத் தொடுவது போன்ற விடியோவை டிவி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன.

தெலங்கானாவில் சில அதிகாரிகள் முதல்வரின் பாதங்களைத் தொடும் போக்கு சரியானது இல்லை என பாஜக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரான ராமச்சந்தர் ராவ் தெரிவித்தார். அதே வேளையில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் அரசியலுக்கு வருவதை, என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சுகாதார அதிகாரியின் நடவடிக்கை குறித்து பேசிய பாஜக தலைவர், இதற்கு முன்பும் ஒரு மூத்த அதிகாரி இதை தான் செய்ததார். அவருக்கு பதவி வழங்கப்பட்டது என்றார் ராமச்சந்தர் ராவ்.

இதனிடையே, சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுகாதார அதிகாரிக்கு 'பிங்க் நிற சட்டை' வழங்க முயன்றனர்.

ஆளும் டிஆர்எஸ் கட்சியின் கொடியும் பிங்க் நிறத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com