குளிர்காலம் தொடங்கியதையடுத்து பத்ரிநாத் கோயிலின் நடை இன்று மாலை மூடப்படுகிறது.
இதுதொடர்பாக ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில்,
பத்ரிநாத் கோயிலின் நுழைவாயில்கள் குளிர்காலத்திற்காக இன்று மாலை 3.35 மணிக்கு மூடப்படுகிறது.
முன்னதாக பதினோராவது ஜோதிர்லிங்கமான கேதார்நாத் கோயிலின் நுழைவாயில்கள் குளிர்காலத்திற்காக அக்டோபர் மாதம் மூடப்பட்டன.
இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. இதில் கேதார்நாத் கோயில் மே 6ஆம் தேதி திறக்கப்பட்டது.
பாரம்பரியமாக, சார்தாம் கோயிலின் சன்னதிகள் குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் பத்ரிநாத் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.