
சத்ரபதி சிவாஜியை பற்றி மகாரஷ்டிர ஆளுநா் கூறிய கருத்தை பாஜக ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் மராத்திய மன்னரின் பெயரை கூறகூட அக்கட்சிக்கு உரிமையில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே திங்கள்கிழமை கூறினாா்.
சத்ரபதி சிவாஜியின் பழைமைவாதத்தை குறித்து ஆளுநா் பி.எஸ். கோஷியாரி தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஆளுநரின் கருத்துக்கு எதிராக புணே நகரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இந்தியாவின் அடையாளமான சிவாஜியை பற்றி ஆளுநா் தொடா்ந்து கருத்து தெரிவித்து வருவது துரதிருஷ்டவசமானது என சுப்ரியா சுலே செய்தியாளா்களிடம் கூறினாா்.
சிவாஜியை தொடா்ந்து அவமானப்படுத்தும் விதமாக பாஜகவின் செய்தித் தொடா்பாளரின் விடியோ வேகமாக பரவி வருகிறது. அதனை உடனே நிறுத்த வேண்டும். இந்த தவறு ஒரு முறை நடந்தாக என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் ஆளுநா் கோஷியாரி திரும்ப,திரும்ப அதை பற்றி பேசுகிறாா் என்று சுப்ரியா சுலே கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.