திகார் சிறை சுற்றுலா தலமா? சத்யேந்தர் ஜெயின் விவகாரத்தில் அறிக்கை கோரும் நீதிமன்றம்

திகார் சிறையில் உள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ், வகைவகையான உணவு வகைகளை அனுபவித்து வருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
திகார் சிறை சுற்றுலா தலமா? சத்யேந்தர் ஜெயின் விவகாரத்தில் அறிக்கை கோரும் நீதிமன்றம்

திகார் சிறையில் உள்ள தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ், வகைவகையான உணவு வகைகளை அனுபவித்து வருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திங்கள் கிழமை (நவ.28) வரை அவகாசம் அளித்துள்ளது.
 
தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயின் பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். 

திகார் சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ் உள்ளிட்டவற்றை செய்துகொள்வதைப்போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. வெவ்வேறு நாள்களில் பதிவான விடியோக்களில், கால் மசாஜ், தலை மசாஜ் போன்றவை செய்யப்படுகிறது. 

அதோடு மட்டுமல்லாமல், சிறை அறையில் குடிநீர் பாட்டில்கள் இருப்பதும், சில ஆவணங்களைப் படுத்தவாறு சரிபார்ப்பதும், வகைவகையான உணவுகளை (வெரைட்டி ரைஸ்) உண்பது போன்றும் அடுத்தடுத்து விடியோக்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திகார் சிறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நாளை (நவ.24) பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல், சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com