குஜராத் கல்வித் துறையில் பாஜக மாற்றம் கொண்டுவந்துள்ளது: பிரதமர் மோடி

குஜராத்தில் பாஜக அரசு கல்வித் துறையில் பல புதிய மற்றும் அறிவியல் சார்ந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத் கல்வித் துறையில் பாஜக மாற்றம் கொண்டுவந்துள்ளது: பிரதமர் மோடி

குஜராத்தில் பாஜக அரசு கல்வித் துறையில் பல புதிய மற்றும் அறிவியல் சார்ந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் பட்ஜெட்டில்  கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.33 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் இந்த அளவுக்கு கல்விக்காக பெரிய அளவில் தொகை ஒதுக்கப்படுவதில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநில பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று அந்தத் தொகை 33 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான் குஜராத் கல்வியில் கண்டுள்ள வளர்ச்சி. நாங்கள் கல்வியில் கொண்டு வந்துள்ள மாற்றம் குஜராத் மாநில மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளது.

பாஜக தலைமையிலான குஜராத் அரசு கல்வித் துறையில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. காந்தி நகர் பல கல்லூரிகள் மற்றும் பல்கழைக் கழகங்களின் கூடாரமாக மாறியுள்ளது. உலகின் முதல் தடயவியல் துறை சார்ந்த பல்கலைக் கழகம் மற்றும் குழந்தைகள் பல்கலைக் கழகம் குஜராத் தலைநகரில் அமைந்துள்ளது. அதேபோல இந்தியாவின் முதல் ஆற்றல் சார்ந்த பல்கலைக் கழகமும் காந்திநகரில் அமைந்துள்ளது என்றார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com