
ட்விட்டர் நிறுவனத்தில் நீலநிறக் குறியீடு சந்தாவிற்கு ஐந்து நாள்களில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணம் செலுத்தியுள்ளனர், இதில் தீவிர வலதுசாரி செல்வாக்குள்ளோர் மற்றும் வயது வந்தோர் கலைஞர்கள் இருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சா்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டா் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கியதை அடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ட்விட்டரில் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் கட்டணம் 8 டாலர் (இந்தியாவில் சுமாா் ரூ.640) விதிக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்
செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நிறுவனத்தில் உள்ள பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் எலான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ட்விட்டா் நிறுவனப் பணியாளா்கள் பலா் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ட்விட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் பல்வேறு போலி ட்விட்டர் கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ட்விட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது. எனவே இந்த போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்தவித அறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அது பெரும் விவாதத்தையும் எழுப்பியது. ஆனால் தன் முடிவில் மஸ்க் உறுதியாக இருந்தார்.
எலான் மஸ்க் செயல்பாடுகள் தொடர்ந்து பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
இதையடுத்து குறிப்பிட்ட சில நாடுகளில் ப்ளூ டிக் பயனர்களிடையே சந்தா வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டு வந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நவம்பர் 10 மற்றும் 15 க்கு இடையில் ட்விட்டர் நீலநிறக் குறியீடு சந்தாதாரர்களான 1,37,000 க்கும் மேற்பட்டோரின் நீலநிறக் குறியீடு சந்தா செலுத்திய விவரங்களை மென்பொருள் வல்லுநர் ஒருவர் கணினியில் புரோகிராமை பயன்படுத்தி திரட்டியுளஅளார். மேலும், நீலநிறக் குறியீடு சந்தா செலுத்தியவர்களின் விவரங்கள், பயனர்களின் பின்தொடர்பவர்கள் விவரம், ஸ்கிரீன் டைம், ட்விட்டர் தளத்தில் இணைந்த தேதி மற்றும் சரிபார்ப்பு நிலை போன்ற தகவல்களை அவர் திரட்டியுள்ளார்.
மேலும், அதில் ஒரு சந்தாதாரர் வெறும் 560 பின்தொடர்பவர்கள் மட்டும் பெற்றிருப்பதாகவும், ஆனால், சுமார் 40 லட்சம் மில்லியன் ட்விட்டர் பின்தொடர்பவர்களைக் கொண்ட யுடியூப் பிரபலமான மைக்கா சலமன்கா உள்பட சிலருக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அதே நேரத்தில் சில செய்தி தலங்கள் மற்றும் யுடியூப் பிரபலங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான ப்ளூ டிக் சந்தாதாரர்கள் சுமார் ஐந்தாயிரம் தீவிர வலதுசாரி செல்வாக்கு பெற்றவர்கள் ட்விட்டர் கணக்குகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.