சண்டிகர்: ஹரியானாவில் பெண்களுக்கு அதிகாரம் என்பது பெண்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாநிலத்தின் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரசாரத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், ஆஷா பணியாளர்களுடன் நேரடியாக உரையாடினார்.
ராஜ்பவனில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட பெண் விளையாட்டு வீரர்களுடன் முர்மு கலந்துரையாடினார்.
மகள்கள் சக்தியின் உருவகம். ஒவ்வொரு குடும்பமும் தம்தம் மகள்களை ஒவ்வொரு துறையிலும் முன்னோக்கி செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும், இதனால், அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். அதே வேளையில், ஒவ்வொரு துறையிலும் அவர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். விளையாட்டுத் துறையில் தங்கள் குடும்பம் மற்றும் மாநிலத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தருனம் இதுவே என்றார்.
ஆணும் பெண்ணும் இணைந்து நடந்தால் குடும்பம், சமுதாயம், நாடு முன்னேறும். ஆனால், ஆண்களை விட பெண்களே வாழ்க்கையில் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே பெண் குழந்தைகளை வளர்த்து வலுப்படுத்துவது குடும்பம், சமூகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றார்.
ஹரியாணாவில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரச்சாரத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக ஆளுநர் மற்றும் முதல்வரை குடியரசுத் தலைவர் பாராட்டினார். இதுபோன்ற புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஹரியாணா மாநில மகள்களின் மன உறுதியை உயரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.