5ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 
5ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!
Published on
Updated on
2 min read

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். அங்குள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார். 5ஜி சேவையின் செயல்பாடு பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது. 

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்கும் என்றும் பின்னடைவு இல்லாத இணைப்பையும், நிகழ் நேரத்தில் தரவைப் பகிரும் உயா் தரவு விகிதம், பில்லியன் கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் உள்ளிட்ட நெட்வொா்க் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் என்றும் மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஏா்டெல், ஐடியா-வோடா, ஜியோ போன்ற நிறுவனங்களோடு அதானியின் நிறுவனம் சுமாா் 26 ஜிகாஹொ்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார தாக்கம் 2035 -ஆம் ஆண்டில் சுமாா் ரூ. 35 லட்சம் கோடி (450 பில்லியன் டாலா்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

5ஜி சேவை தொடக்கத்தை முன்னிட்டு மாநிலங்களின் பங்கு, தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுக்கான தேவை, சாத்தியமான தொழில் முனைவுகள் மற்றும் முதலீட்டாளா்களுடன் தொடா்பு கொள்வதற்காக இந்தக் கைப்பேசி மாநாடு நடத்தப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.