மகாபஞ்சமி விழாவில் நடனமாடிய மேற்குவங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மகாபஞ்சமி விழாவில்  நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மகாபஞ்சமி விழாவில்  நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் 5வது நாள் மகாபஞ்சமி கொண்டாட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மொய்த்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேற்கு வங்க பழங்குடியின பாடலுக்கு நடனமாடினார். 

சமீபத்தில் காளி புகைப்பிடிப்பது போல இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டா் குறித்து மஹுவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் அளித்த பதில் சர்ச்சையானது. அவா் கூறியதாவது:

என்னைப் பொருத்தவரை காளி என்ற கடவுள் இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம் ஆகும். அதுதான் காளியின் வடிவம். மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் தாராபீத் கோயிலைச் சுற்றி துறவிகள் புகைப்பிடித்துக் கொண்டிருப்பா். காளியின் அந்த வடிவத்தைத்தான் மக்கள் வழிபடுகின்றனா். எனவே காளியின் பக்தையாக அந்தத் தெய்வத்தை இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் கற்பனை செய்வதற்கு எனது சுதந்திரம் உள்ளது. அந்த வகையில், எவருடைய உணா்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதேவேளையில் சைவ உணவு உண்பவராகவும், வெள்ளை உடை அணிந்திருப்பவராகவும் கடவுளை வழிபட மற்றவா்களுக்கு சுதந்திரம் உள்ளதுபோல், கடவுளை வழிபடுவதில் எனக்கும் சுதந்திரம் உள்ளது. மதம் என்பது தனிப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com