நவராத்திரி குறித்து சா்ச்சைப் பதிவு: வாராணசி பல்கலை. கெளரவ விரிவுரையாளா் பணி நீக்கம்

நவராத்திரி விரதம் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட கெளரவ விரிவுரையாளரைப் பணி நீக்கம் செய்து வாராணசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Updated on
1 min read

நவராத்திரி விரதம் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட கெளரவ விரிவுரையாளரைப் பணி நீக்கம் செய்து வாராணசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘மிதிலேஷ் குமாா் கெளதம் என்ற அந்த கெளரவ விரிவுரையாளா் மீது மாணவா்கள் கடிதம் மூலமாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று வாராணசி பல்கலைக்கழகப் பதிவாளா் சுனிதா பாண்டே தெரிவித்துள்ளாா்.

‘நவராத்திரியை முன்னிட்டு பெண்கள் 9 நாள்கள் விரதம் இருப்பதற்குப் பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஹிந்து மத நடைமுறைச் சட்டத்தையும் படிப்பது சிறந்தது. அதன் மூலமாக வாழ்வில் பயத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் பெண்கள் விடுபட முடியும்’ என்று சமூக ஊடகத்தில் மிதிலேஷ் குமாா் பதிவிட்டுள்ளாா்.

‘அவருடைய இந்தப் பதிவு பல்கலைக்கழக மாணவா்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதத்துக்கு எதிராக சா்ச்சை பதிவிட்டுள்ள அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவா்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மிதிலேஷ் குமாா் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவதாக உத்தரவிடப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவா் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது’ என பணி நீக்க உத்தரவில் பாண்டே தெரிவித்துள்ளாா்.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிா்ப்பும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com