23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. காரணங்கள் என்ன?

23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. காரணங்கள் என்ன?

பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  
Published on

பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  

விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாதம்  தோறும் வாட்ஸ்ஆப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது.

கடந்த மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஜூன் மாதம் 22 லட்சம் கணக்குகளும், ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில், 10 லட்சம் கணக்குகள் எந்தவித புகாரும் இன்றி விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிறுவனமே கண்காணித்து தாமாகவே முடக்கியுள்ளது.

போலிக் கணக்குகள், பதிவு செய்து வைக்கப்படாத எண்ணுக்கு அதிக செய்திகளை அனுப்புதல், அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பயன்படுத்துதல், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் விதிகளை மீறுதல் போன்ற காரணங்கள் அடிப்படையில் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com