ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக பெண்

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக பெண் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சந்தோஷ் யாதவ்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சந்தோஷ் யாதவ்

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக பெண் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு கிளை அமைப்புகளுடன் இயங்கி வருகிறது. தற்போதைய இந்திய அரசியலில் முக்கிய கவனம் பெற்ற அமைப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது.  இந்த அமைப்பில் பெண்கள் தலைவராக வர முடியாது என விதிமுறைகள் கொண்டதுடன் முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்ட அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இதுவரையிலான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் ஒரு பெண் கூட கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை எனும் விமர்சனம் இந்த அமைப்பின் மீது உள்ளது. 

இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்றில் இதுவரை ஒரு பெண் கூட ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் பெண்ணான சந்தோஷ் யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com