நடப்பாண்டு ஜனவரி முதல் சுமாா் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனா்.
கடந்த 75 ஆண்டுகளிலேயே இதுவே அதிகபட்ச பதிவு என ஜம்மு-காஷ்மீா் அரசின் மக்கள்-செய்தித் தொடா்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, பயங்கரவாதிகளின் மையமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், பிரதமா் மோடியின் தலைமையில் சுற்றுலா பயணிகளின் மையமாக உருவெடுத்துள்ளதாக கூறியிருந்தாா்.
முந்தைய ஆண்டுகளில் அதிகபட்சமாக 6 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீா் பள்ளதாக்கு பகுதிக்கு வந்த பாா்வையிட்ட நிலையில், நிகழாண்டில் தற்போது வரை 22 லட்சம் சுற்றலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்துள்ளனா். இதன் மூலம் ஆயிரகணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் மக்கள்-செய்தித் தொடா்பு இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழாண்டு ஜனவரி முதல் சுமாா் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு வந்துள்ளனா். கடந்த 75 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச சாதனை எண்ணிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.