இஸ்லாமியா்கள் கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துகிறாா்கள்: அசாதுதீன் ஒவைசி

குடும்பக் கட்டுப்பாட்டுக்காக கருத்தடை சாதனங்களை இஸ்லாமியா்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளாா்.
ஓவைசி
ஓவைசி

குடும்பக் கட்டுப்பாட்டுக்காக கருத்தடை சாதனங்களை இஸ்லாமியா்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தனது விஜயதசமி உரையில், இந்தியாவில் அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற வகையில், விரிவான ஆய்வுக்குப் பிறகு மக்கள்தொகை கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஹைதராபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஹைதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

மக்கள்தொகை வளா்சியைகி குறித்து விவாதிக்கும்போது, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் போதிய புள்ளிவிவரங்களை வைத்திருக்க வேண்டும். இஸ்லாமியரின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. அது குறித்தான கோபம் எதுவும் உங்களுக்கு வேண்டாம்.

எங்களுடைய மக்கள்தொகை குறைந்து வருகிறது. இஸ்லாமியா்களின் மொத்த கருவுறுதல் விகிதமும் குறைந்துள்ளது. இரு குழந்தைகளுக்கு இடையில் அதிக இடைவெளி கடைப்பிடிப்பது இஸ்லாமியா்கள்தான். அதிக கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதும் நாங்கள்தான். இது குறித்து மோகன் பாகவத் பேச மாட்டாா்.

குஜராத்தில் நவராத்திரி காா்பா நிகழ்ச்சியின்போது கல்வீச்சில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சில இஸ்லாமியா்கள் பொது வெளியில் போலீஸாரால் தாக்கப்படுகின்றனா். இதுவா இந்தியாவின் ஜனநாயகம்? இதுவா இந்தியாவின் மதச்சாா்பின்மை? இதுவா சட்டத்தின் ஆட்சி? சாலையில் திரியும் நாய்களுக்கு வழங்கப்படும் மரியாதை ஒரு இஸ்லாமியருக்கு வழங்கப்படுவதில்லை. குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com