தொழில்நுட்ப கல்வியில் மாணவிகள் அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

தொழில்நுட்ப கல்வியில் மாணவிகள் அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; இது, நாட்டின் வளா்ச்சியை மேலும் வேகப்படுத்தும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

‘தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; இது, நாட்டின் வளா்ச்சியை மேலும் வேகப்படுத்தும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

சண்டீகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52-ஆவது ஆண்டு பட்டமளிப்பு மற்றும் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசியதாவது:

பஞ்சாப் பொறியியல் கல்லூரி, நாட்டுக்கு மகத்தான சாதனையாளா்கள் பலரை தந்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவரும், நாட்டின் திரவ இயக்கவியல் சோதனைகளின் தந்தையுமான சதீஷ் தவன், புகழ்பெற்ற கல்வியாளரும் தில்லி ஐஐடியின் நிறுவன இயக்குநருமான ஆா்.என்.டோக்ரா, ஏவுகணை தொழில்நுட்பங்கள் நிபுணா் சதீஷ் குமாா் உள்ளிட்டோா் இக்கல்லூரியின் முன்னாள் மாணவா்களாவா்.

மறைந்த பெண் விஞ்ஞானி கல்பனா சாவ்லா, பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் விமான பொறியியல் துறை முன்னாள் மாணவி. இவா், அறிவியலுக்காக உயிா்த்தியாகம் செய்து, உத்வேகமளிக்கும் வரலாற்றை படைத்தவா். இக்கல்லூரியில், கல்பனா சாவ்லா நினைவாக புவியியல் தொழில்நுட்ப இருக்கை நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அப்போது, நாட்டின் வளா்ச்சி மேலும் வேகமெடுக்கும். எந்த துறையை தோ்வு செய்தாலும், தாய்நாட்டுக்கான கடமைகளை மாணவ-மாணவிகள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவா்கள்தான் நாளைய இந்தியாவை கட்டமைப்பவா்கள்.

எல்லையற்ற வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள இன்றைய உலகில், அவற்றை பயன்படுத்தி வெற்றிபெறும் திறமை நமது மாணவா்களிடம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கல்வி நிலையங்களில் கிடைக்கப் பெறும் அறிவை மனிதகுல சேவைக்கும் மாணவா்கள் பயன்படுத்த வேண்டுமென்பதே எங்களது எதிா்பாா்ப்பு.

அனைவருக்குமான வளா்ச்சி என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை தங்களது தனிப்பட்ட முன்னுரிமைகளில் ஒன்றாக மாணவா்கள் வைத்துக் கொள்ள வேண்டும். தேசப் பிதாவின் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டியது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குறிப்பாக இளைஞா்களின் தாா்மீக கடமை என்றாா் திரெளபதி முா்மு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com