மேம்படுத்தப்பட்ட ஸ்ரீ மகா காலேஸ்வா்கோயில் வளாகம்: பிரதமா் திறந்து வைத்தாா்

மத்திய பிரதேசத்தில் ரூ.351 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ மகா காலேஸ்வா் கோயில் வளாகத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மேம்படுத்தப்பட்ட ஸ்ரீ மகா காலேஸ்வா்கோயில் வளாகம்: பிரதமா் திறந்து வைத்தாா்

மத்திய பிரதேசத்தில் ரூ.351 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீ மகா காலேஸ்வா் கோயில் வளாகத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் தொன்மையான ஸ்ரீ மகா காலேஸ்வா் கோயில் உள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிலிங்க கோயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலின் மேம்படுத்தப்பட்ட வளாகத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அவா், அதன் பிரம்மாண்ட நுழைவுவாயில் முன்பாக நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தையும் திறந்துவைத்தாா்.

கோயிலின் நந்தி துவாரம் வழியாக மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய்.சி.படேல், அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோருடன் நடந்து சென்ற பிரதமா் மோடி, கோயிலின் மேம்படுத்தப்பட்ட வளாகத்தில் உள்ள கட்டமைப்புகள், சுவரோவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். அப்போது வழிநெடுக வெவ்வேறு கலைக் குழுக்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ மகா காலேஸ்வா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டம் ரூ.856 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் முதல் கட்டப் பணிகள் ரூ.351 கோடி செலவில் நிறைவடைந்த நிலையில், அதனை பிரதமா் மோடி திறந்து வைத்துள்ளாா். முதல் கட்டப் பணிகளில் மேம்படுத்தப்பட்டுள்ள வளாகம் 900 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. அதில் ஒப்பனையாக சிறிய வடிவங்கள் அடங்கிய 108 பாறைத் தூண்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தூண்களின் உச்சியில் திரிசூலமும் சிவபெருமானின் முத்திரைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தெய்வ கலைச் சிற்பங்களால் சூழப்பட்ட நீரூற்றுகள், சிவபுராண கதைகளைச் சித்தரிக்கும் 53 ஒளிரும் சுவரோவியங்கள் ஆகியவையும் வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இது உஜ்ஜைனில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com