பொது இடங்களில் சார்ஜ் செய்வோர் கவனத்திற்கு...

பொது இடத்தில் செல்போனை சார்ஜ் செய்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செல்போன்கள் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகிவிட்டன. பெரும்பாலான வேலைகளில் அதன் பயன்பாடு அதிகமாகவுள்ளது. இது வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், இதனால் பல நேரங்களில் மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொது இடத்தில் செல்போனை சார்ஜ் செய்தால், கவனமாக இருக்க வேண்டும். பல சமயங்களில் ரயில் நிலையம், விமான நிலையம் அல்லது பிற இடங்களில் கிடைக்கும் சாக்கெட்டில் சார்ஜரை வைத்துதான் போனை சார்ஜ் செய்வார்கள். ஆனால், இது தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு வழிவகுக்கும்.

இது குறித்து ஒடிசா காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செல்போன் சார்ஜிங் நிலையங்கள், யுஎஸ்பி பவர் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இணைய மோசடி செய்பவர்கள் போனில் மால்வேரை(malware) நிறுவுவதன் மூலம் மொபைலில் இருந்து தனிப்பட்ட தகவல்களை திருடலாம் என்று ஒடிசா காவல்துறை சுட்டுரையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பொது இடங்களில் செல்போன் சார்ஜ் செய்வது குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத் சைபர் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 5ஜி சிம் மேம்படுத்தல் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதாக சைபர் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் அவர்களின் சிம்மை முடக்கி, அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள். இதற்காக, மோசடி செய்பவர்களால் செல்போன் பயனருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படுகிறது. பயனர்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அவர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான பல விவரங்கள் மோசடி செய்பவர்களுக்கு சென்றடையும்.

அதன் பிறகு அதை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதன் காரணமாக, இதுபோன்ற அறியப்படாத இணைப்புகளுடன் கவனமாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com