2500 பணியாளர்களை பணிநீக்‍கம் செய்யப்போவதாக பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பு!

மார்ச் 2023க்குள் லாபம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களில் 5 சதவீதம் பணியாளர்களை (2500 பேரை) பணிநீக்கம் செய்யப்போவதாக எட்டெக் யூனிகார்ன் பைஜூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2500 பணியாளர்களை பணிநீக்‍கம் செய்யப்போவதாக பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read


புதுதில்லி: மார்ச் 2023க்குள் லாபம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களில் 5 சதவீதம் பணியாளர்களை (2500 பேரை) பணிநீக்கம் செய்யப்போவதாக எட்டெக் யூனிகார்ன் பைஜூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பைஜூஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்ற முடிவெடுக்‍கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரண்டாயிரத்து 500 பேரை பணிநீக்‍கம் செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பைஜூஸ் நிறுவனம்,  2020 நிதியாண்டில் ரூ.231.69 கோடியாக இருந்த வருமானம், 2021 நிதியாண்டில் ரூ.4,588 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக 18 மாதங்கள் கால தாமத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

2020 இல் ரூ.2,873.34 கோடியாக இருந்த நிறுவனத்தின் செலவுகள், நடப்பு நிதியாண்டில் மொத்த செலவுகள் ரூ.7,027.47 கோடியாக உள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கவனம் செலுத்துவது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் லாபத்தை நோக்கி நகர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்‍குள், நிறுவனம் லாபத்தை அடைய உதவும் என்று பைஜூஸ் இந்திய வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மிருணாள் மோஹித் தெரிவித்துள்ளார். 

மேலும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பது, நிறுவனத்தை நம்பும் வகையில் விற்பனை மற்றும் விடியோ அழைப்பு தளங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பைஜூஸ் அதன் விற்பனை மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகிறது.

வலுவான வருவாய் வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

சிறப்பான வளர்ச்சியை எட்ட சந்தைக்கான செலவை அதிகரிக்க பைஜூஸ் முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் மார்ச் 2023 இன் வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் லாபத்தை அடைய உதவும்" 
என்று மிருணாள் மோஹித் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com