தில்லி: மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்

டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தலைநகர் தில்லியில் மரங்களை பிடுங்கி மாற்று இடங்களில் நட்ட பிறகு அதன் நிலை என்ன என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தலைநகர் தில்லியில் மரங்களை பிடுங்கி மாற்று இடங்களில் நட்ட பிறகு அதன் நிலை என்ன என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

மாற்று இடங்களில் நட்ட பிறகு மரங்களின் பிழைத்திருக்கும் விகிதம் குறித்து அறிய இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு மரங்களை அவற்றின் இயற்கையான இடங்களில் இருந்து மாற்று இடங்களில் நடும் திட்டத்தின் தாக்கம் குறித்து அறிய உதவும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளானது கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டு தற்போது தில்லியின் தெற்கு பிரிவில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தில்லி அரசு இந்த கணக்கெடுப்பு நடத்துவதற்கான கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது . அதன்படி, தில்லி உயர் நீதிமன்றத்தில் சில தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்தத் தரவுகளின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மரங்களை அதன் இயற்கையான இடத்தில் இருந்து மாற்றி நட்டதில் மூன்றில் ஒரு பகுதி மரங்களே பிழைத்துள்ளன. அதாவது, 33.33 சதவிகிதம் மரங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன.  அதன்பின் 2019-20ஆம் ஆண்டுகளில் வனத்துறை மேற்கொண்ட இடைக்கால கணக்கெடுப்பில் மாற்று இடங்களில் நடப்பட்ட 4,162 மரங்களில் 1,521 மரங்கள் மட்டுமே பிழைத்துள்ளன. அதேபோல 2020-21ஆம் ஆண்டுகளிம் மாற்று இடங்களில் நடப்பட்ட 7,003 மரங்களில் வெறும் 2,001 மரங்கள் மட்டுமே பிழைத்துள்ளன. 2021-22ஆம் ஆண்டுகளில் இதுவரை நடப்பட்ட 5,296 மரங்களில் 1,965 மரங்கள் மட்டுமே பிழைத்துள்ளன.

இந்த மரங்களை மாற்று இடங்களில் நடும் திட்டம் டிசம்பர் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒரு நிறுவனம் தங்களது வளர்ச்சிப் பணிக்காக வெட்டப்படும் மரங்களில் குறைந்தது 80 சதவிகித மரங்களை மாற்று இடங்களில் கண்டிப்பாக நட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com