கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரசன்ன பாலச்சந்திர வரலே சனிக்கிழமை பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நீதிபதி வரலேயின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நீதிபதி வரலே 1962 ஜூன் 23 அன்று கர்நாடகாவில் உள்ள நிபானியில் பிறந்தார். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1985ல் வழக்குரைஞர் ஆனார்.
ஜூலை 2008-ல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.