கோப்புப் படம்
கோப்புப் படம்

2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து 65% மின்சார உற்பத்தி! ஆர்.கே.சிங்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின் உற்பத்தி திறனில் 65 சதவீதத்திற்கும் மேலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து  மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

புதுதில்லி: 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின் உற்பத்தி திறனில் 65 சதவீதத்திற்கும் மேலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து  மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

பசுமை எரிசக்தி தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்: 

புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து 65 சதவீத மின் உற்பத்தி திறனை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில், அதை விட அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா 90 ஜிகா வாட் கருவிகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும், இது தற்போது 20 ஜிகா வாட்டாக உள்ளது.

தற்போது 15 முதல் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் கருவி உற்பத்தி ஆலைகள் கட்டுமானத்தில் உள்ளது என்றும், உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்-II இன் கீழ் இந்தியா 40 ஜிகாவாட் வசதிகளைக் பெறும். அதே வேளையில் பாலிசிலிகான் வயிலாக 2030ஆம் ஆண்டிற்குள் 90 ஜிகாவாட்டாக சூரிய ஒளி உற்பத்தி திறனை நாம் பெறுவோம் என்றார்.

அதிக திறன் கொண்ட சோலார் கருவிகளை தயாரிப்பதற்கு தொழில் துறையினர் மாற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். நாட்டில் ஏற்கனவே 170 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இருப்பதாகவும், மேலும் 80 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2030-க்குள் 65 சதவீதத்திற்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை எட்டுவதோடு மட்டுமல்லாமல், அதை விட அதிகமாக உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com