நிலக்கரி இறக்குமதியை குறைக்க பங்குதாரர்கள் பாடுபட வேண்டும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி 

நிலக்கரி இறக்குமதியை குறைக்க பங்குதாரர்கள் பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சா் பிரகலாத் ஜோஷி என்று அழைப்பு விடுத்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியை குறைக்க பங்குதாரர்கள் பாடுபட வேண்டும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி 

நிலக்கரி இறக்குமதியை குறைக்க பங்குதாரர்கள் பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சா் பிரகலாத் ஜோஷி என்று அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் திங்கள்கிழமை முதலாவது தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சியை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது: நிலக்கரித் துறையை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்ற கடந்த 8 ஆண்டுகளில் அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பிரகலாத் ஜோஷி, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு நிலக்கரி உற்பத்தியை முன்கூட்டியே தொடங்கினால், நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. 

2021-22 ஆம் ஆண்டில், நாட்டின் நிலக்கரித் துறை 772 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை 8.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. 327 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட மொத்தம் 75 நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 42 நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுவதாகவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். 

மேலும், நிலக்கரி ஏலத்தின் நான்காவது தவணை நிறைவடைந்துள்ளதாகவும், ஐந்தாவது தவணை நிலக்கரி ஏலம் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். நிலக்கரி இறக்குமதியை குறைக்க அனைத்து பங்குதாரர்களும் பாடுபட வேண்டும் என்றும் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com