மதமாற்றம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர்

மத மாற்றம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்தல் ஆகியவையால் மக்கள் சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்துவதாகவும், இதனால் மதமாற்ற எதிர்ப்பு சட்டங்களை அமல்படுத்த அழைப்பு விடுத்துள்ளார் தத்தாத்ரேயா.
மதமாற்றம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர்
Published on
Updated on
1 min read

உத்தரப்பிரதேசம்: மதமாற்றம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்தல் உள்ளிட்டவைகளால் மக்கள் சமச்சீரற்ற தன்மையை அடைவதாகவும், இதனால் மதமாற்ற எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நான்கு நாள் அகில இந்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர், மதமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் அமைப்பு முயற்சித்து வருவதாகக் கூறினார்.

இதன் விளைவாக, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற மதங்களுக்கு மாறியோர் மீண்டும் இந்து  மதத்துக்கு வருவதற்கான சங்கபரிவார் முயற்சிகளுக்கு தற்போது சாதகமான விளைவு கிடைத்துள்ளது.

மதமாற்றத்திற்குப் பிறகு, மக்கள் சமநிலையின்மைக்கு இரண்டாவது பெரிய காரணம் எல்லைத் தாண்டிய ஊடுருவல் என்றார் ஹொசபலே. 

வங்கதேசத்திலிருந்து ஊடுருவியதால் ஏற்படும் ஏற்றத்தாழ்வும், வடக்கு பிகாரின் பூர்னியா மற்றும் கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காணப்படுகிறது. அதே வேளையில், யார் மதம் மாறுகிறாரோ, அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்ககூடாது எனவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com