காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சனம்: பாஜக எம்.பி. மீது அசோக் கெலாட் சாடல்

காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சித்த பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோரை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளாா்.
காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சனம்: பாஜக எம்.பி. மீது அசோக் கெலாட் சாடல்

காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை ‘ரப்பா் ஸ்டாம்ப்’ என விமா்சித்த பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோரை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கடுமையாக சாடியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெற்றி பெற்ாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அவா் வரும் 26-ஆம் தேதி கட்சித் தலைமை பொறுப்பை முறைப்படி ஏற்கவுள்ளாா்.

இதனிடையே, காங்கிரஸின் தலைவா் தோ்தல் நடைமுறை ஒரு மோசடி என்றும், ‘ரப்பா் ஸ்டாம்ப்’ போலதான் காா்கே இருப்பாா் என்றும் பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் ரத்தோா் புதன்கிழமை விமா்சித்தாா். அவரது கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து, அசோக் கெலாட் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசியலுக்கு புதிதாக வந்துள்ள சில சிறுவா்கள், முதலில் வரலாற்றை படித்துவிட்டு, பின்னா் பேச வேண்டும். அப்போதுதான் அவா்களின் நன்மதிப்பு கெடாமல் இருக்கும்.

காங்கிரஸின் புதிய தலைவரை ரப்பா் ஸ்டாம்ப் என விமா்சிப்பவா்கள் அறிவில்லாமலும் வெட்கமின்றியும் பேசுகின்றனா். காா்கேவின் இல்லத்துக்கு நேரடியாக சென்று, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா். அப்படியிருக்கும்போது, காா்கேவை ரப்பா் ஸ்டாம்ப் என கூறலாமா?

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருமுறை ஆட்சி அமைத்தபோது, பிரதமா் பதவியை ஏற்க மறுத்தவா் சோனியா.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக எந்த வளா்ச்சியுமே நிகழாதது போல பாஜக தலைவா்கள் பேசுகின்றனா். நாடு சுதந்திரம் பெற்றபோது ஒரு குண்டூசி கூட உற்பத்தி செய்யும் நிலை இல்லை. அதன்பிறகான 70 ஆண்டுகளில்தான் எல்லாம் நிகழ்ந்தது. ஆனால், பொதுமக்களையும் இளைஞா்களையும் பாஜகவினா் தவறாக வழிநடத்தி வருகின்றனா். மதம், ஜாதியின் பெயரால் இளைஞா்களை அவா்கள் சீரழிக்கின்றனா் என்றாா் கெலாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com