
தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தின் மீது நடுவானில் பறவை மோதியதில் சேதம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆமதாபாத்திலிருந்து இன்று காலை தில்லி விமான நிலையத்திற்கு ஆகாசா ஏர் நிறுவனத்தின் க்யூபி-1333 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் 1,900 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தை சோதனை செய்ததில், ரேடோம் எனப்படும் விமானத்தின் முன்பகுதியில் சேதம் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தை விமானப் போக்குவரத்து இயக்ககம் உறுதி செய்துள்ளது. மேலும், தொழில்நுட்பக் காரணத்தால் இந்த விமானத்தில் அடுத்த சேவை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.