'கடந்த 5 ஆண்டுகளில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்'

கடந்த 5 ஆண்டுகளில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
பாலியல் துன்புறுத்தல்
பாலியல் துன்புறுத்தல்

கடந்த 5 ஆண்டுகளில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சட்டங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறைகள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகின்றன. 

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், உரிமைகளைப் பெற போராடுவதற்கும் செய்யப்படும் அதிகாரபூர்வ அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 50,857 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9,572 புகார்கள் வந்துள்ளதாகவும் அடுத்ததாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 5,340 புகார்களும் வந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் அடுத்த மூன்று இடங்களில் ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் முறையே 4,276, 3,205 மற்றும் 4,685 என்ற அளவில் உள்ளன. 

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கையேடு வழங்குதல், சைபர் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், கல்வி நிறுவன தங்குமிடங்கள், விடுதிகளுக்கான வழிகாட்டுதல்கள், இணையப் பாதுகாப்பு குழந்தை பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com