குஜராத் பாலம் விபத்திற்கு காரணம் என்ன? நேரில் பார்த்தவர் அதிர்ச்சித் தகவல்

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் மோர்பி நகரில் தொங்குப் பாலம் இடிந்து விழுந்ததில் 132-க்கும் மேற்பட்டபவர்கள்  பலியாகிய சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூறும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
குஜராத் பாலம் விபத்திற்கு காரணம் என்ன? நேரில் பார்த்தவர் அதிர்ச்சித் தகவல்
Published on
Updated on
2 min read

குஜராத்: ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் மோர்பி நகரில் தொங்குப் பாலம் இடிந்து விழுந்ததில் 132-க்கும் மேற்பட்டபவர்கள்  பலியாகிய சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூறும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கேபிள் பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது. 

பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400க்கும் மேற்பட்டோர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கினர்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட 140 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் இடிந்து விழுந்ததை பார்த்த அருகாமையில் உள்ள தேநீர் வியாபாரி ஒருவர் கூறுகையில், "எல்லாம் சில நொடிகளில் நடந்தது. மக்கள் பாலத்தில் இருந்ததையும், பின்னர் தண்ணீரில் விழுந்ததையும் நான் பார்த்தேன். அவர்கள் தண்ணீரில் தவறி விழுந்தனர். இந்நிகழ்வை பார்ப்பதற்கு மிகவும் மனவேதனையாக இருந்தது. பாலம் இடிந்து விழுந்ததில் 7 மாத கர்ப்பிணிப் பெண் இறந்தார். நான் உடைந்து போனேன்.

எல்லா இடங்களிலும் மக்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துகிடந்தனர். நான் என்னால் முடிந்தவரை உதவ முயற்சித்தேன். மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்," என்று தேநீர் வியாபாரி கூறினார்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் கூடியதால் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  நேற்று விடுமுறை நாள் என்பதால் பாலத்தின் மீது 400க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான எடையைத் தாங்க முடியாமல் அறுந்து விழுந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொங்கு பாலம் அறுந்து விழுந்த இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்திற்குப் பிறகு, முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ்பாய் சங்வி, அமைச்சர் பிரிஜேஷ்பாய் மெர்ஜா மற்றும் மாநில அமைச்சர் ஸ்ரீ அரவிந்த்பாய் ராயனி ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வழிகாட்டுதல்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com