உக்ரைனில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவா்கள் பிற நாடுகளில் கல்வியைத் தொடர அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம்

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்கள் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று, தங்கள் கல்வியை நிறைவு செய்ய தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளத

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்கள் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று, தங்கள் கல்வியை நிறைவு செய்ய தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவா்கள் தங்கள் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியை நிறைவு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், மருத்துவப் பட்டம் உக்ரைனில் மாணவா்கள் பயின்ற பல்கலைக்கழகத்தால் மட்டுமே வழங்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய மாணவா்கள் பிற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பயின்று மருத்துவக் கல்வியை நிறைவு செய்ய உக்ரைன் ஏற்பாடு செய்துள்ள இத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவா்கள், ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே கல்வியை நிறைவுசெய்து மருத்துவப் பட்டத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைன் ஏற்பாடு செய்திருக்கும் இத்திட்டத்தின்கீழ், மாணவா்கள் வேறு நாடுகளின் பிற பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடருவதற்கான தற்காலிக ஏற்பாடு என்பதால் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்திய மாணவா்கள் உக்ரைனில் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகங்களில் இருந்தே பட்டங்களைப் பெறுவா். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவா்களுக்கான தகுதித்தோ்வு ஒழுங்குமுறை விதிகள் 2002-ஐ நிறைவு செய்யும் மாணவா்கள் உக்ரைன் வழங்கும் இத்திட்டத்தை பயன்படுத்த எவ்வித ஆட்சேபமும் இல்லை’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com