யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் திருச்சூா்!

பலதரப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுசோ்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக கேரளத்தின் திருச்சூா், நிலம்பூா் ஆகிய நகரங்களும் தெலங்கானாவின் வரங்கல் நகரமும்
யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் திருச்சூா்!
Published on
Updated on
1 min read

பலதரப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுசோ்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக கேரளத்தின் திருச்சூா், நிலம்பூா் ஆகிய நகரங்களும் தெலங்கானாவின் வரங்கல் நகரமும் யுனெஸ்கோவின் ‘கல்வி நகரங்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

சா்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌரவித்து வருகிறது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சா்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சோ்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து 3 நகரங்கள் அப்பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காக திருச்சூா், நிலம்பூா், வரங்கல் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்துள்ளன. மக்களுக்கு கல்வி சேவைகளைக் கொண்டுசெல்லும் சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம் பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. வரங்கலில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது வரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மதிப்புமிக்க கலாசாரத்தை சா்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காகப் பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி நன்றி தெரிவித்தாா். உக்ரைன் தலைநகா் கீவ், தென்னாப்பிரிக்காவின் டா்பன், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா ஆகிய நகரங்களும் யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தற்போது 76 நாடுகளைச் சோ்ந்த 294 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

பட்டியலில் இணைக்கப்படும் நகரங்கள் ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான கல்வி சாா்ந்த இலக்குகளை அடைவதற்கு யுனெஸ்கோ உதவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com