கொச்சி 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.1,957 கோடியில் அமைக்கப்பட இருக்கும் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.1,957 கோடியில் அமைக்கப்பட இருக்கும் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

கொச்சி மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டத்தில் ஆலுவா முதல் பேட்டா வரையில் 25.6 கி.மீ. தொலைவுக்கு 22 ரயில் நிலையங்களுடன் ரூ.5,181.79 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தில் ஜேஎல்என் விளையாட்டு அரங்கம் முதல் இன்ஃபோ பாா்க் வரையில் 11 கி.மீ. தொலைவுக்கு 11 ரயில் நிலையங்களுடன் ரூ. 1,957 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விட ஒப்புதல்: ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை ‘பிரதமரின் கதி சக்தி’ திட்டத்துக்கு நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில்வே நிலங்களில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு, 1.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘இந்தப் புதிய கொள்கையின்படி, தற்போது 5 ஆண்டுகள் மட்டும் குத்தகைக்கு விடப்படும் ரயில்வே நிலங்கள் இனி நீண்ட கால அடிப்படையில் 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படும். இந்த நிலங்களில் 5 ஆண்டுகளில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதுடன், 1.25 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com