

புது தில்லி: வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வரும் உரிமம் தொகை மற்றும் கட்டணம் தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்து உத்திரவிட்டுள்ள, நிலக்கரி அமைச்சகம் கனிம சலுகை விதிகளின் 1960 (எம்.சி.ஆர்) குற்றமற்றதாக்கியதால், அதன் கீழ் வரும் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
வணிகம் மற்றும் குடிமக்களுக்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக நிலக்கரி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது, 'வியாபாரத்தை எளிதாக்குதல்', என்ற அடிப்படையில், அரசின் கொள்கையை மேம்படுத்துவதற்கு, எம்.சி.ஆர்-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சில விதிகள் குற்றமற்றதாக மாற்றப்பட்டு, 10 விதிகளின் கீழ் விதிக்கப்படும் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், வாடகை, உரிமம் தொகை, கட்டணம் அல்லது அரசுக்கு செலுத்த வேண்டிய பிற தொகைகளை தாமதமாக செலுத்துவதற்கான அபராத வட்டி விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் நிலக்கரி துறையில் மிகவும் தேவையான பொருளாதார தளர்வுகளை வழங்க வாய்ப்புள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.