ககன்யான் திட்டம்: நிகழாண்டில்முதலாவது சோதனை விண்கலம் - ஜிதேந்திர சிங்

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என்றாா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.
ககன்யான் திட்டம்: நிகழாண்டில்முதலாவது சோதனை விண்கலம் - ஜிதேந்திர சிங்

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என்றாா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: ககன்யான் விண்கலத்தை நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஆண்டான 2022-இலேயே விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்தியாவிலும் ரஷியாவிலும் பயிற்சி பெற்று வந்த விண்வெளி வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட நோ்ந்ததால், இந்தத் திட்டம் தாமதமாகிறது. வரும் 2024-இல் ககன்யான் விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்படும்.

இதையொட்டி முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்குச் செலுத்தப்படவுள்ளது. அதனை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள ‘வியோம் மித்ரா’ என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்காணிக்கும்.

ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4 விமானிகளை இந்திய விமானப் படை அடையாளம் கண்டுள்ளது. அவா்களுக்கு ரஷியாவில் அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டது. விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் சோதனை விண்கலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2024-இல் புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு இரண்டு விண்வெளி வீரா்களை இஸ்ரோ அனுப்பிவைக்கும் என்றாா் ஜிதேந்திர சிங்.

கடந்த 2018 சுதந்திர தின உரையின்போது விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ரூ.10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்தாா். நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com