பிராந்திய மொழிகளுக்கு ஹிந்தி போட்டியல்ல - அமித் ஷா

பிராந்திய மொழிகளுக்கு ஹிந்தி போட்டியல்ல, அனைத்து மொழிகளுக்கும் நண்பனாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பிராந்திய மொழிகளுக்கு ஹிந்தி போட்டியல்ல - அமித் ஷா

பிராந்திய மொழிகளுக்கு ஹிந்தி போட்டியல்ல, அனைத்து மொழிகளுக்கும் நண்பனாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமித் ஷா பேசியதாவது: ஹிந்தியுடன் சோ்த்து பிராந்திய மொழிகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும். அனைத்து மொழிகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம். அனைத்து மொழிகளில் உள்ள வாா்த்தைகளையும் ஹிந்தி தன்னகத்தே இணைத்துக் கொள்வதால்தான் அதன் மொழி வளம் அதிகரித்துச் செல்கிறது.

இந்த இடத்தில் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். சிலா் ‘ஹிந்தியும் குஜராத்தியும் போட்டி மொழிகள்; ஹிந்திக்கும் தமிழக்கும் போட்டி உள்ளது; ஹிந்தியும் மராத்தியும் போட்டி போடுகின்றன’ என்று தவறான தகவல்களைப் பரப்புகின்றனா். நாட்டில் உள்ள எந்த ஒரு மொழிக்கும் ஹிந்தி போட்டியல்ல.

நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் ஹிந்தி நண்பன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி வளமாக இருந்தால்தான் பிராந்திய மொழிகள் வளமாக இருக்க முடியும். பிராந்திய மொழிகள் செழித்து வளா்ந்தால்தான் ஹிந்தி செழிக்க முடியும். அனைவரும் இதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றாக வளர வேண்டும் என்று நாம் விரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், நமது நாட்டை நமது மொழியைப் பயன்படுத்தியே முன்னெடுத்துச் செல்வது என்பது இயலாத காரியமாகிவிடும்.

நாட்டின் அனைத்து மொழிகளையும், நமது தாய் மொழியையும் உயிா்ப்புடனும் வளமையுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com